ஜனவரி 2-ம் தேதியன்று சட்டமன்றத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளை பேசுவேன் - ஸ்டாலின்
ஜனவரி 2-ம் தேதியன்று கூடும் சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசுவேன் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
ஈரோடு மாவட்டம் மூலக்கரையில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை சந்தித்து ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தமிழக அரசு உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் கூறினார்.