"கமல்ஹாசனின் பயணம் முதலமைச்சர் பதவிக்கானது அல்ல" - இயக்குநர் அமீர்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் பயணம் முதலமைச்சர் பதவியை நோக்கி அல்ல என திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.;
நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் அமீர், கமல்ஹாசனின் பயணம் தமிழக மக்களுக்கானது என்றார். கமல் ஹாசன் சொல்வதை மக்கள் பின்பற்றினால் பத்து வருடம் பின்னோக்கி இருக்கும் தமிழகம் முன்னோக்கி செல்லும் என்றார்.