எச். ராஜாவை கைது செய்ய மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களின் குடும்ப பெண்கள் குறித்து, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்த கருத்துக்களை கண்டித்து, இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் நாளை நடத்த உள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு,திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

Update: 2018-09-26 15:12 GMT
இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களின் குடும்ப பெண்கள் குறித்து, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா  தெரிவித்த கருத்துக்களை  கண்டித்து, இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் நாளை  நடத்த உள்ள  உண்ணாவிரதப்  போராட்டத்திற்கு,திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களை  கொச்சைப் படுத்திப் பேசி வரும் எச். ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார் .அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திமுக அரசு கொண்டு வந்த முற்போக்கான சட்டத்தை எதிர்ப்பவர்கள், ஒரு போதும் திருக்கோயில்களின பாதுகாவலர்கள் என்று பொய் வேடம் போட முடியாது என்பதை உணர வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் ,தமது அறிக்கையில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்