திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக நோய் தொற்று காரணமாக காய்ச்சல்

வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து, காவேரி மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Update: 2018-07-26 15:46 GMT
வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து, காவேரி மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
கருணாநிதியின் உடல் நிலை குறித்து கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருவதால், இதற்கு பதிலளிக்கும் வகையில், மருத்துவமனையின் டாக்டர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், வயது மூப்பு காரணமாக கருணாநிதியின் உடல் நலத்தில் நலிவு ஏற்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர். தற்போது, சிறு நீரக பாதையில் ஏற்பட்டுள்ள நோய் தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளதாகவும், அதற்கு தேவையான மருந்துகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கோபாலபுரம் இல்லத்திலேயே மருத்துவமனை வசதிகளுடன் 24 மணி நேரமும், டாக்டர்கள் மற்றும் நர்சுகள் அடங்கிய குழு, கருணாநிதியை கவனித்து வருவதாகவும் டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர். எனவே, கருணாநிதியின் உடல் நிலையை கவனத்தில் கொண்டு, அவரை யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் என்று அறிக்கையொன்றில், காவேரி மருத்துவமனை டாக்டர்கள் குழு, கேட்டுக் கொண்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்