மு.க. ஸ்டாலினுடன் முத்தரசன் சந்திப்பு
பதிவு: ஜூன் 28, 2018, 08:04 PM
எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் சென்னையில் சந்தித்தார். ஆழ்வார் பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது,  சென்னை - சேலம்  8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது குறித்து, முத்தரசன் விளக்கியதாக  திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.