நடிகர் எஸ்.வி. சேகரை, நாளை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவர் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

பெண் பத்திரிக்கையாளர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் எஸ்.வி. சேகரை, தமிழக போலீஸார் வரும் 20-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்;

Update: 2018-06-19 05:36 GMT
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் அதிமுக சார்பில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு பேசினார். இதையடுத்து  அங்கு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் , பெண் பத்திரிக்கையாளர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் எஸ்.வி. சேகரை, தமிழக போலீஸார் வரும் 20-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்