மாணவர்களுக்கு புதிய சிக்கல் : 11 ம் வகுப்பில் சீ ட் கொடுக்க தனியார் பள்ளிகள் மறுப்பு
10ஆம் வகுப்பு தேர்வில், 400 வரை மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு, 11 ம் வகுப்பில் ‛சீட்' கொடுக்க தனியார் பள்ளிகள் மறுப்பதால் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.;
10ஆம் வகுப்பு தேர்வில், 400 வரை மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு, 11 ம் வகுப்பில் ‛சீட்' கொடுக்க தனியார் பள்ளிகள் மறுப்பதால் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
கடந்த 23 ம் தேதி 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய 9.50 லட்சம் மாணவர்களில், 94 புள்ளி ஐந்து, சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விழுக்காடு அதிகமாக இருந்தபோதும், 200 முதல் 400 க்குள் மதிப்பெண் வாங்கிய மாணவர்கள் எண்ணிக்கையே அதிகம். 71 சதவிகித மாணவர்கள், இந்த வரையறைக்குள் மதிப்பெண்களை வாங்கியிருப்பது, புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ‛டிசி'(TC) வாங்கிக்கொண்டு, பள்ளியை விட்டு வெளியேறும் நிலைக்கு, தனியார் பள்ளி மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 400 மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு சீட் கிடைத்தாலும், விரும்பிய குரூப் கிடைப்பதில்லை. குறிப்பாக, 201 மதிப்பெண் முதல், 300 மதிப்பெண் எடுத்துள்ள 3.12 லட்சம் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.