தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் - தமிழக மாணவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

தமிழில் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சத்யதேவர் என்ற மாணவர் மேல்முறையீடு செய்துள்ளார்.

Update: 2018-07-14 13:22 GMT
நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக மாணவர் மேல்முறையீடு 

மருத்துவ நுழைவுத் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு கேள்வித் தாளில் குளறுபடி இருந்ததன் காரணமாக 196 கருணை மதிப்பெண்கள் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தினால் தன்னைப் போன்ற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கோரி சென்னையை சேர்ந்த சத்யதேவர் என்ற மாணவர் மேல்முறையீடு செய்துள்ளார். தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கினால் ஆங்கிலத்தில் தேர்வு எழுதிய தன்னைப் போன்ற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிய வருகிறது... 


Tags:    

மேலும் செய்திகள்