கெஜ்ரிவாலை நக்கலடித்த ஆம் ஆத்மி எம்பி

Update: 2024-05-23 06:07 GMT

தன் மீதான தாக்குதல் விவகாரத்தில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என முதல்வர் கூறுவது நகைப்புக்குறியது என சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் டெல்லி முதல்வரின் இல்லத்தில் அவரை சந்திப்பதற்காக சென்ற ஆம் ஆத்மி எம்பி சுவாதி மாலிவால் முதல்வர் கேஜ்ரிவாலின் உதவியாளர் பைபவ் குமாரால் தாக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் இரண்டு விதமான குற்றச்சாட்டுகள் கூறப்படுவதால் அது குறித்து நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நபரோடு அலைந்து கொண்டு இருக்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்து நகைப்புக்குறியது என்று சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்