தேர்தல் பத்திரம் மட்டுமல்ல.. இன்னும் பல வழிகளில் பணம்.. புது அதிர்வை கிளப்பிய ரிப்போர்ட்

Update: 2024-04-28 08:09 GMT

தேர்தல் பத்திரம் மட்டுமல்ல.. இன்னும் பல வழிகளில் பணம்.. ரூ.1.35 லட்சம் கோடி.. புது அதிர்வை கிளப்பிய ரிப்போர்ட்

2024 மக்களவை தேர்தல் செலவுகள் ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது.

VOVT

லாப நோக்கற்ற அமைப்பான ஊடக ஆய்வு மையம், கடந்த 35 ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்று வரும் தேர்தல்களுக்கான செலவினங்களை மதிப்பீடு செய்து வருகிறது. 2024 மக்களவைத் தேர்தலுக்கான மொத்த செலவு ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று இந்த அமைப்பு கணித்துள்ளது. இதில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் நேரடி மற்றும் மறைமுக செலவுகள், மத்திய, மாநில அரசுகளின் செலவுகள் ஆகிய அனைத்தும் அடங்கும். 2019 மக்களவை தேர்தலில், 60 ஆயிரம் கோடி செலவிடப்பட்டிருந்தாக கணிக்கப்பட்டிருந்த நிலையில், அதை விட இரண்டு மடங்குக்கும் அதிக செலவு இந்த முறை செய்யப்படுவதாக கூறியுள்ளது. 2019 தேர்தல்

செலவினத்தில் பாஜகவின் பங்கு மட்டும் 45 சதவீதம் என்று ஊடக ஆய்வு மையத்தின் தலைவர் பாஸ்கர ராவ் தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் தவிர்த்து பல்வேறு வழிகளில் கட்சிகளுக்கு பணம் வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்