யோகி ஆதித்யநாத் வருகைக்கு எதிர்ப்பு சமாஜ்வாதி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
உத்தரபிரதேசம் மாநிலம் சண்தௌலி (CHANDAULI) மாவட்டத்தில் சமாஜ்வாதி கட்சியினர் நடத்திய போராட்டத்தில், தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.;
உத்தரபிரதேசம் மாநிலம் சண்தௌலி (CHANDAULI) மாவட்டத்தில் சமாஜ்வாதி கட்சியினர் நடத்திய போராட்டத்தில், தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க சண்தௌலி மாவட்டத்திற்கு சென்றார். இந்நிலையில், முதலமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது, போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.