ரூ.450 கோடி மதிப்பில் ராணி கமலாபதி ரயில் நிலையம் - நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் நரேந்திர மோடி

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 450 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்டு மறுசீரமைக்கப்பட்ட ராணி கமலாபதி ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Update: 2021-11-16 02:43 GMT
இதில் குளிர் சாதன வசதி கொண்ட பயணிகள் ஓய்வு அறை, உணவகங்கள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், உணவுக் கூடங்கள், மிக பெரிய பார்க்கிங் வசதி போன்றவற்றை உள்ளது. மத்திய பிரதேசத்தில் அமைக்கப்பட்ட உலகத் தரத்திலான முதல் ரயில் நிலையம் இதுவாகும். ரயில் நிலையத்தை திறந்து வைத்து பேசிய, பிரதமர் மோடி,  இந்தியா எந்த அளவுக்கு மாறி வருகிறது என்பதற்கு இந்த ரயில் நிலையம் சிறந்த உதாரணம் என தெரிவித்துள்ளார். தொலை தூரங்களில் மட்டுமல்ல நாட்டின் கலாசாரம் மற்றும் சுற்றுலாவை இணைக்கும், முக்கிய ஊடகமாக இந்திய ரயில்வே திகழ்வதாக பிரதமர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்