சைடஸ் கேடிலா நிறுவனத்திடம் ஓரு கோடி டோஸ் - மத்திய அரசு கொள்முதல் செய்ய திட்டம்

ஒரு கோடி கொரோனா தடுப்பூசியை சைடஸ் கேடிலா நிறுவனத்திடம் இருந்து மத்திய அரசு கொள்முதல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2021-11-09 05:25 GMT
உலகில் பல நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட தொடங்கி உள்ளன. அந்த வகையில் இந்தியாவிலும் 12 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட சைடஸ் கேடிலா நிறுவனம், குழந்தைகளுக்கான தடுப்பூசியை தயாரித்து வருகிறது. அவசர கால பயன்பாட்டிற்காக, இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா தடுப்பூசியின் விலையை குறைக்க சைடஸ் கேடிலா நிறுவனம் ஒப்புக்கொண்டு ஒரு டோஸ் விலையை 265 ரூபாயாக குறைத்துள்ளது.   ஒரு டோஸ் விலை ரூபாய் 265 என்ற அடிப்படையில் ஒரு கோடி கொரோனா தடுப்பூசியை சைடஸ் கேடிலா நிறுவனத்திலிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்