ஒரே நாளில் 22 லட்சம் டன் நிலக்கரி விநியோகம் - அமைச்சர் பிரகலாத் ஜோஷி பாராட்டு

அனல் மின் நிலையங்களுக்கு ஒரே நாளில் 22 லட்சம் டன் நிலக்கரியை அனுப்பி வைத்து சாதனை படைத்திருப்பதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.;

Update: 2021-10-31 04:46 GMT
அனல் மின் நிலையங்களுக்கு ஒரே நாளில் 22 லட்சம் டன் நிலக்கரியை அனுப்பி வைத்து சாதனை படைத்திருப்பதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கடந்த 28 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள அனல் மின்நிலையங்களுக்கு 22 லட்சம் டன் நிலக்கரி விநியோகிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர், இதில் 18 லட்சம் டன் நிலக்கரி, கோல் இந்தியா நிறுவனத்தின் பங்களிப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த சாதனைக்காக அனைத்து நிலக்கரி நிறுவனங்களுக்கும் அமைச்சர் பிரகலாத் ஜோஷி பாராட்டு தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்