கேரளாவில் இன்றும் கனமழை தொடரும் - 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
கேரளாவில் இன்றும் கனமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
கேரளாவில் இன்றும் கனமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய 5 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் தெற்கு கேரளாவில் அதிக மழை பெய்யும் என்றும், வட கேரளாவில் பிற்பகலில் கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மலைப்பகுதிகளில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை எச்சரிக்கையால், கோட்டயத்தின் கிழக்கு பகுதி உஷார் நிலையில் உள்ளது. நேற்று மாலை தாழ்வான பகுதிகளில் அரை மணி நேரம் பலத்த மழை பெய்த நிலையில், வண்டம்படலில் மண் சரிவு ஏற்பட்டது. அதேபோல், மணி மலையாற்றில் நீர்வரத்து அதிகரித்து, கிளை ஆறுகள் நிரம்பி வழிந்ததால், கரையோரம் வசித்த மக்கள் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். தற்போது கோட்டயத்தில் மொத்தம் 36 முகாம்களில் ஆயிரத்து 110 குடும்பங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.