இலவச உணவு தானியங்கள் ஒதுக்கீடு - இந்திய உணவு கழகம் தகவல்

பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் ஐந்து மாதங்களுக்கு 198 லட்சம் டன் இலவச உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2021-06-30 03:18 GMT
இலவச உணவு தானியங்கள் ஒதுக்கீடு - இந்திய உணவு கழகம் தகவல் 

பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் ஐந்து மாதங்களுக்கு 198 லட்சம் டன் இலவச உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டம் ஜூலை முதல் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது,. இந்த நிலையில், அந்த ஐந்து மாதங்களுக்கு 198 லட்சம் டன் இலவச உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய உணவு கழகம்  தெரிவித்துள்ளது,. ஜூன் மாதம் வரை, பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் 77 லட்சம்  டன் இலவச உணவு தானியங்களை அனைத்து 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய உணவு கழகம் வழங்கியுள்ளது,. தற்போது மொத்தம் 886 லட்சம் டன் உணவு தானியங்கள் தற்போது மத்திய தொகுப்பில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது,. பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்களை குறித்த நேரத்தில் விநியோகிக்குமாறு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

 
Tags:    

மேலும் செய்திகள்