இந்தியாவுக்கு 5.5 மில்லியன் டாலர் நிதி வழங்கப்படும் - எல்.ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம்

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை எதிர்கொள்ள இந்தியாவுக்கு 5 புள்ளி 5 மில்லியன் டாலர் நிதி உதவி அளிப்பதாக எல்.ஜி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

Update: 2021-05-13 08:33 GMT
இந்தியாவுக்கு 5.5 மில்லியன் டாலர் நிதி வழங்கப்படும் - எல்.ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை எதிர்கொள்ள இந்தியாவுக்கு 5 புள்ளி 5 மில்லியன் டாலர் நிதி உதவி அளிப்பதாக எல்.ஜி. நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நாடு முழுவதும் 10 தற்காலிக மருத்தவமனைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தொரிவித்துள்ளது. 300க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள எல்.ஜி நிறுவனம், கொரோனாவை எதிர்கொள்ள 5 புள்ளி 5 மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்