கொரோனா மையத்தில் ஆக்சிஜன் கசிவு.. ஆக்சிஜன் முழுவதும் வெளியேறியதால் பதட்டம்

ஆந்திர மாநிலம் விஜயவாடா மருத்துவமனையில், ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டதால் நோயாளிகள் பதட்டம் அடைந்தனர்.

Update: 2021-05-13 02:28 GMT
கொரோனா மையத்தில் ஆக்சிஜன் கசிவு.. ஆக்சிஜன் முழுவதும் வெளியேறியதால் பதட்டம்

ஆந்திர மாநிலம் விஜயவாடா மருத்துவமனையில், ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டதால் நோயாளிகள் பதட்டம் அடைந்தனர்.ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில், ரயில்வே மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தற்போது, இந்த மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு, 500க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை ஆக்சிஜன் நிரப்புவதற்காக வந்த டேங்கர், ஆக்சிஜன் நிரப்பும் பணியின் போது, திடீரென பழுது ஏற்பட்டது. இதனால், ஆக்சிஜன் மருத்துவமனை வளாகத்தில் வெளியேறியதால், இதைப் பார்த்த நோயாளிகள் பதட்டம் அடைந்தனர். மருத்துவர்கள் மற்றும் சீரமைப்பு பணியாளர்கள் முயன்றும் பழுதை சீரமைக்க முடியாததால், ஆக்சிஜன் முழுவதுமாக வெளியேறிய பிறகு டேங்கர் எடுத்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாக நோயாளிகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது எனவும், உடனடியாக மாற்று ஆக்சிசன் டேங்கர் வரவழைக்கப்பட்ட உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆக்சிசன் கசிவு காரணமாக மருத்துவமனை வளாகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்