ஒ.டி.டி., சமூக வலைதளங்கள் தொடர்பான வழக்கு - உச்சநீதிமன்றத்தில் அரசு பதில் மனுதாக்கல்
ஒ.டி.டி. தளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் முறைப்படுத்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.;
ஷாஷாங்க் சேகர் ஜா என்பவர் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஒ.டி.டி., சமூக வலைதளங்களை முறைப்படுத்த மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட ஒழுங்குமுறை விதிகளை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. திரைப்படங்கள் என்ற பெயரில் ஆபாச காட்சிகளை காட்சிப்படுத்தும் ஓடிடி தளங்களை முறைப்படுத்த வேண்டியுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில், நெட்ஃபிளிக்ஸ், அமேஸான் பிரைம் போன்ற ஒ.டி.டி. தளங்கள் கடுமையாக கண்காணிக்கப்பட்டு முறைப்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், பல்வேறு ஆலோசனைகளும், புகார்களும் பொது மக்களிடம் இருந்தும், மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்தும் கிடைத்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.