17 வயது சிறுவன் மீது கொடூர தாக்குதல் - சமூக வலைதளங்களில் பரவும் தாக்குதல் காட்சிகள்
கேரளாவில் 17 வயது சிறுவனை நண்பர்கள் கொடூரமாக தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.;
கேரளாவில் 17 வயது சிறுவனை நண்பர்கள் கொடூரமாக தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே களமசேரி பகுதியைச் சேர்ந்த சிலர் போதைப் பொருட்களை பயன்படுத்தி வந்துள்ளனர். இதனை 17 வயதான சிறுவன் ஒருவன் அவர்களின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கண்டிக்கவே, அவர்களின் கோபம் நண்பனின் மீது திரும்பியது. சம்பவத்தன்று சிறுவனை வரவழைத்த 7 பேர் கொண்ட கும்பல், அவரை கொடூரமாக தாக்கியது. ஜல்லிக்கற்கள் மீது முட்டி போட வைத்தும், உருட்டுக்கட்டையால் தாக்கியும் கொடூரமாக நடந்த கொண்டது அந்த கும்பல். இந்த காட்சியானது செல்போனில் பதிவு செய்யப்பட்ட நிலையில் அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.