வாட்ஸ்-அப்பிற்கு போட்டியாக 'அரட்டை' - களமிறங்கியது ஜோஹோ நிறுவனம்

வாட்ஸ் அப் செயலிக்கு போட்டியாக தமிழகத்தின் ஜோஹோ நிறுவனம் அரட்டை என்ற பிரத்யேக செயலியை வெளியிட்டுள்ளது.

Update: 2021-01-11 11:07 GMT
வாட்ஸ் அப் நிறுவனத்தின் புதிய ப்ரைவசி பாலிசி பிரச்சினையால் பயனாளர்கள் பலரும் சிக்னல், டெலிகிராம் போன்ற பிற செயலிகளை நோக்கி நகரும் சூழல் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த சமூக வலைதள போட்டியில் தமிழக பன்னாட்டு நிறுவனமான ஜோஹோ நிறுவனத்தின் அரட்டை செயலி புதிதாக களமிறங்கியுள்ளது, 'அ' என்ற தமிழின் முதல் எழுத்த லோகோவாக கொண்டிருக்கும் இச்செயலியை கூகுள் ப்ளே  ஸ்டோரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து உள்ளனர். வாட்ஸ் அப்பில் பல வருடம் கழித்து வந்த வசதிகள் கூட இதில் துவகத்திலே உள்ளது எனக் கூறும் பயனாளர்கள் செயலி மீது பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருக்கிறார்கள். "வாட்ஸ் அப்பிற்கு சிறந்த மாற்றாக இருக்கும்" எனவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்னும் சில வாரங்களில் இந்த செயலில் முழு செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகம், எளிமை, வேடிக்கை, பயனர்களின் தரவு பாதுகாப்பு உள்ளிட்டவற்றை மையாக கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டு உள்ளதாக நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்