மக்கள் மத்தியில் தேவையற்ற விமர்சனம் வேண்டாம் - கிரண்பேடி

ஆளுநர் அலுவலகத்தையும், பிரதமரையும் மக்களிடையே தினமும் தவறாக சித்தரிப்பதை முதலமைச்சர் நாராயணசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.;

Update: 2021-01-03 05:00 GMT
ஆளுநர் அலுவலகத்தையும், பிரதமரையும் மக்களிடையே தினமும் தவறாக சித்தரிப்பதை முதலமைச்சர் நாராயணசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார். மக்கள் நலத் திட்டங்களை தடுப்பதாக கூறி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து, ஆளுநர் அலுவலகம், சட்டவிதிகளை கடுமையாக கடைபிடித்து வருவதாக கூறியுள்ள கிரண்பேடி, ஊழல் இல்லாத, சட்டபடியான ஆளுநர் மாளிகையை கடைபிடித்து வருகிறேன் எனக் கூறியுள்ள அவர், புதுச்சேரியின் பொருளாதாரத்தை வளர்த்து, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்