"கூட்டம் சேர்வதை கட்டுப்படுத்த வேண்டும்" - யூனியன் பிரதேச, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று வேகமாக பரவ அதிக வாய்ப்பாக அமையக் கூடிய அனைத்து நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனிக்கும் படி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.;

Update: 2020-12-30 10:41 GMT
உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று வேகமாக பரவ அதிக வாய்ப்பாக அமையக் கூடிய அனைத்து நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனிக்கும் படி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்ற நிகழ்வுகளின் போதும் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்தும் படி அறிவுறுத்தி உள்ளார். மாநிலங்களில் நிலவும் உள்ளூர் சூழ்நிலையை ஆய்வு செய்து அதற்கேற்ப  இன்றும், நாளையும் மற்றும் ஜனவரி 15 ஆம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கவும், முடிந்தால் இரவு நேர ஊரடங்கு போன்றவற்றை அமல்படுத்தும் படியும் அவர் யோசனை தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்