விவசாய அமைப்பின் 75-வது ஆண்டு தினம் - ரூ.75 நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75ஆவது ஆண்டு தினத்தைக் குறிக்கும் வகையில் சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

Update: 2020-10-16 09:16 GMT
டெல்லியில் நடந்த நிகழ்வில் 75 ரூபாய் சிறப்பு நாணயத்தை அவர் வெளியிட்டார். இவை தவிர சமீபத்தில், உருவாக்கப்பட்ட உயிரி செறிவூட்டிய 8 பயிர்களின் 17 ரகங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த ரகங்கள் மற்ற உணவு வகைகளுடன் இந்திய உணவை ஊட்டச்சத்து மிக்க உணவாக மாற்றக்கூடியவை என்றும் உள்ளூர் நிலப்பரப்பு, வேளாண் ரகங்களிலிருந்து இவை உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த செறிவூட்டப்பட்ட பயிர் வகைகள் மேம்படுத்தப்பட்டு, அரசின் மதிய உணவு திட்டத்திலும், அங்கன் வாடிகளிலும் இணைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்க வழி ஏற்படுத்துவதோடு, தொழில் வளர்ச்சிக்கு புதிய வழிகளை உருவாக்கும் என்றும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,  கொரோனா காலத்தில், 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்