"வெளிநாடுவாழ் இந்திய மாணவர்களுக்கு 15% ஒதுக்கீடு கட்டாயமில்லை" - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தனியார் மருத்துவக் கல்லூரிகளில், வெளிநாடுவாழ் இந்திய மாணவர்களுக்கு 15 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டியது கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2020-10-10 03:17 GMT
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாடுவாழ் இந்திய மாணவர்களுக்கு 15 சதவீத ஒதுக்கீட்டை ரத்து செய்து ராஜஸ்தான் மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு வாரியம் அறிவிக்கை வெளியிட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தனி நீதிபதி, மாணவர்களுக்கு 15 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஹரியானாவை சேர்ந்த நிலாய் குப்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாடுவாழ் இந்திய மாணவர்களுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டியது கட்டாயமில்லை என உத்தரவிட்டது. மேலும், தொழில்நுட்ப கல்வியை அளிக்கும் தனியார் கல்லூரிகள், வெளிநாடுவாழ் இந்திய மாணவர்களுக்கு அளிக்கும் இடஒதுக்கீட்டின் அளவை, அந்த கல்லூரிகளே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்