கேரள தங்கக் கடத்தல் வழக்கு - அசையும், அசையா சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்களின் 1 கோடி 84 லட்சம் ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

Update: 2020-09-12 02:01 GMT
கேரள தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய டி.கே.பயஸ் என்பவரின் மனைவிக்கு சொந்தமான பங்களா, கோழிக்கோடு ஒய்.எம்.சுபைரின் வீடு, அப்துல் ரஹீமின் நிலம், அஸ்ரப் கல்லுன்கல்லின் பெயரில் பெடரல் வங்கியில் உள்ள 85 லட்சத்து15 ஆயிரத்து 230 ரூபாய் ஆகியவற்றை முடக்கி உள்ளனர். 2013-ல் சுமார் 17 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், கடத்தியதன் மூலம், 1 கோடியே 84 லட்சம் ரூபாய் வரி இழப்பு ஏற்படுத்திய வழக்கில், அசையும், அசையா சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. மேலும் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்