கங்கனாவுக்கு இமாச்சலப்பிரதேச அரசு சார்பில் பாதுகாப்பு

நடிகை கங்கனா ரனாவத்துக்கு இமலாச்சலப்பிரதேச அரசு சார்பில் தனியாக பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2020-09-07 13:13 GMT
நடிகை கங்கனா ரனாவத்துக்கு இமலாச்சலப்பிரதேச அரசு சார்பில் தனியாக பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ள நிலையில் தற்போது மாநில அரசு சார்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மனாலியில் உள்ள அவரது வீட்டில் காவல்துறையினரின் ஒரு குழு நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கூறியுள்ள அம்மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் கங்கனா இந்த மாநிலத்தின் மகள் என்றும் அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை என்றும் தெரிவித்தார். இதனிடையே, அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்