கர்நாடக கலவரம் - காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் கைது

பெங்களூருவில் எம்.எல்.ஏ. வீட்டை உடைத்தது உள்ளிட்ட கலவரத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் கவுன்சிலரின் கணவர் உள்ளிட்ட 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2020-08-14 10:10 GMT
பெங்களூருவில் எம்.எல்.ஏ. வீட்டை உடைத்தது உள்ளிட்ட கலவரத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் கவுன்சிலரின் கணவர் உள்ளிட்ட 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகநூலில் சர்ச்சை கருத்து பதிவிட்டதாக புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாச மூர்த்தியின் வீடு மற்றும் காவல் நிலையம் முன்பு கலவரமானது. இதுகுறித்த விசாரணையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று ஒரே நாளில் 60 பேர் கைது செய்யப்பட்ட  நிலையில், பெங்களூரு நாகவார் பகுதி காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் இர்சாத் பேகத்தின் கணவர் கலீம் பாஷா கலவரத்துக்கு காரணம் என கைது செய்யப்பட்டுள்ளார். கலவரத்துக்கு காரணம் எஸ்.டி.பி.ஐ. கட்சிதான் என உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்