பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறை திறப்பு குறித்து உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

திருவனந்தபுரத்தில் பத்மநாப சுவாமி,கோவிலின் பாதாள அறை திறப்பு குறித்து, உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்க உள்ளது.

Update: 2020-07-12 16:38 GMT
கடந்த 2011-ம் ஆண்டில் 7 பேர் கொண்ட அதிகாரிகள் முன்னிலையில், திருவனந்தபுரத்தில் பத்மநாப சுவாமி,கோவிலில் உள்ள 5 பாதாள அறைகள் திறக்கப்பட்டன. அதில், தங்கம், வைரம், வைடூரியம்,18 அடியில் தங்க மாலை இருந்தன. இவற்றின் அன்றைய மதிப்பு ஒன்றரை லட்சம் கோடிக்கு மேல் என கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கோவிலை கமாண்டோ படையினர் துப்பாக்கியுடன் பாதுகாத்து வருகின்றனர். திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் தற்போது, கோவிலை பராமரித்து வரும் நிலையில், பெரிய அளவில் உள்ள 6 -வது அறை திறக்கப்படாமல் உள்ளது. இந்த அறையை திறப்பது குறித்து நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. திறக்கப்பட உள்ள அறையில்  ஏராளமான தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதை திறந்தால்,வேறு  ஆபத்து வருமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்