எஸ் பேங்க் முறைகேடு வழக்கு - லண்டனில் உள்ள ராணா கபூர் சொத்தை முடக்க முடிவு

ராணா கபூர் காலத்தில் சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு கொடுத்த கடனில், 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வாராக் கடனாக மாறியுள்ளதாகவும், சுமார் 5 ஆயிரத்து 50 கோடி ரூபாய் பணத்தை, 100 shell கம்பெனிகள் மூலம் ராணா கபூர் குடும்பத்தினர் முறைகேடாக சம்பாதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2020-07-07 06:09 GMT
ராணா கபூர் காலத்தில் சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு கொடுத்த கடனில், 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வாராக் கடனாக மாறியுள்ளதாகவும், சுமார் 5 ஆயிரத்து 50 கோடி ரூபாய் பணத்தை, 100 shell கம்பெனிகள் மூலம் ராணா கபூர் குடும்பத்தினர் முறைகேடாக சம்பாதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் பேரில் அமலாக்கத்துறை  மற்றும் சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரித்து வருகிறது.எஸ் பேங்க் முறைகேடு வழக்கில், லண்டனின் பிரதான இடத்தில் உள்ள  ராணா கபூரின் சொத்து மற்றும் 50கோடி ரூபாய் நிரந்தர வைப்பு நிதியை முடக்க அமலாக்கத்துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் இந்தியாவில் பல சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ள நிலையில், வெளிநாட்டில் உள்ள சொத்தை அமலாக்கத் துறை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளது இது முதன்முறை என கூறப்படுகிறது. இந்த சொத்துக்கள் முடக்கும் பணி அடுத்த வாரம் அமலாக்கத்துறை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்