இந்திய பகுதிகளுடன் கூடிய புதிய நேபாள வரைபடம் - நேபாளத்தின் நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம்

இந்திய பகுதிகளுடன் கூடிய புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் அளிக்கும், நேபாள அரசின், அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கு, இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.;

Update: 2020-06-14 03:20 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள, லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்து புதிய வரைபடத்தை நேபாள அரசு கடந்த மாதம் வெளியிட்டது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்த நிலையில், கடந்த சில வாரங்களாக இந்திய - நேபாள எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த 3 பகுதிகளை உள்ளடக்கிய புதிய நேபாள வரைபடத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் அரசியல் சாசன திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறுகையில், இதற்கான எந்த வரலாற்று உண்மையையோ, ஆதாரமோ இல்லை என்றும், இதற்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்