"கொரோனா, ஊரடங்கு நிலவரம் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் மோடி, அமித்ஷா ஆலோசனை"

எடப்பாடி பழனிசாமி, எடியூரப்பா, கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி பங்கேற்பு;

Update: 2020-04-27 08:16 GMT
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு குறித்து, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஊரடங்கு தளர்வுகளின் முக்கியத்துவம், ஊரடங்கு கண்டிப்பாக செயல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கி பேசியதாக தெரிகிறது. மாநில முதலமைச்சர்களிடம், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில்  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்கவில்லை. அதே சமயம் தங்களது ஆலோசனைகளை, கேரள முதல்வர் எழுத்து மூலம் அளித்துள்ளதாகவும், கேரள மாநில தலைமை செயலாளர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்