ஷியா யாத்திரீகர்களை மீட்கக் கோரிய வழக்கு: முடிந்த உதவிகளை செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஈரான் நாட்டில் உள்ள குவாமில் சிக்கியுள்ள 850 ஷியா யாத்திரீகர்களை உடனடியாக மீட்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2020-03-27 12:40 GMT
ஈரான் நாட்டில் உள்ள குவாமில் சிக்கியுள்ள 850 ஷியா யாத்திரீகர்களை உடனடியாக மீட்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லடாக்கைச் சேர்ந்த முஸ்தஃபா தாக்கல் செய்த மனுவை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு காணொலி வாயிலாக இன்று விசாரித்தது. மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் , ஈரான் நாட்டில் சிக்கி உள்ளவர்களுக்கு செய்ய வாய்ப்பு உள்ள   உதவிகளை மத்திய அரசு அளிக்க வேண்டும் எனவும் ​நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்