"நித்தியானந்தா சொத்துகளை முடக்கவேண்டும்"- ராம்நகர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பாலியல் வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர் ஆகாமல் இருந்ததால், நித்தியானந்தாவின் சொத்துகளை முடக்க ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-03-04 11:50 GMT
நித்தியானந்தா மீதான பாலியல் வழக்கு ராம்நகர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 40 முறைக்கு மேல் நீதிமன்ற விசாரணைக்காக நித்தியானந்தா ஆஜராகாததால், அவருக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனிடையே லெனின் கருப்பன் தொடர்ந்து வழக்கு உள்ளிட்ட 2 வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்காக நித்தியானந்தா ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வரவில்லை. இதையடுத்து நித்தியானந்தாவின் சொத்துகள் மற்றும் நாடு முழுவதும் அவரின் ஆசிரமத்துக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்