சிஏஏ போராட்டத்தில் மீண்டும் வன்முறை - 144 தடையுத்தரவு, போலீசார் பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லியின் பாஜன்புரா பகுதியில் சிஏஏ போராட்டத்தில் மீண்டும் வன்முறை நிகழ்ந்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.;
டெல்லியின் பாஜன்புரா பகுதியில் சிஏஏ போராட்டத்தில் மீண்டும் வன்முறை நிகழ்ந்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. டெல்லியில் சிஏஏ போராட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் நடைபெற்ற போராட்டத்தில், வன்முறை நிகழ்ந்ததில் இதுவரை 7 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் பாஜன்புரா பகுதியில் மீண்டும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பதற்றம் அதிகரித்துள்ளதால் பாஜன்புரா மற்றும் கஜோருவா காஸ் பகுதியில், 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.