"சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை" - வீரர்களுக்கு இந்திய கடற்படை அதிரடி உத்தரவு

இந்திய கடற்படை வீரர்களுக்கு பேஸ்புக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2019-12-30 08:56 GMT
இந்திய கடற்படை வீரர்களுக்கு பேஸ்புக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்படை தளங்கள் மற்றும் போர்க்கப்பல்களில் ஸ்மார்போன்களை பயன்படுத்தவும் வீரர்களுக்கு இந்திய கடற்படை தடை விதித்துள்ளது. சமூக வலைதளம் மூலம் இந்திய கடற்படை குறித்த ரகசிய தகவல்களை எதிரி புலனாய்வு அமைப்புகளுக்கு கசியவிட்ட 7 கடற்படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற சமூக வலைதளங்களில் தகவல்களை பகிர்வதற்கும் ஈ-காமர்ஸ் இணைய தளங்களை பயன்படுத்தவும் கடற்படை வீரர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்