ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் - 20 தொகுதிகளுக்கு இன்று 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு

ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இரண்டாம் கட்ட தேர்தல் இன்று தொடங்கி விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.;

Update: 2019-12-07 08:28 GMT
ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இரண்டாம் கட்ட தேர்தல் இன்று தொடங்கி விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.  20 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் மொத்தம் 260 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.காலை 11 மணி நிலவரப்படி 28 புள்ளி 51 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. ஜார்க்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரும் 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்