புதுடெல்லி : போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே கடும் மோதல் - ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பதற்றம்

டெல்லியில் போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் நீதிமன்ற வளாகம் கலவரப்பகுதியாக காட்சி அளித்தது.

Update: 2019-11-03 02:06 GMT
டெல்லியில் போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் நீதிமன்ற வளாகம் கலவரப்பகுதியாக காட்சி அளித்தது. டெல்லி தீஸ் ஹசாரே மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இங்கு, வழக்கறிஞர்கள், போலீசார், பொதுமக்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், திடீரென, போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்த மோதலின் போது, துப்பாக்கி குண்டு முழங்கிய சத்தம் கேட்டதால் பெரும் பரபரப்புக்குள்ளானது. பலரும் அங்கும் இங்குமாக ஓடியதால் அப்பகுதியே கலவரப்பகுதி போல காட்சி அளித்தது. நீதிமன்ற வளாகத்தில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என போலீசார் கூறியதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு ஒரு வாகனம் தீயிட்டு எரிக்கப்பட்டது. அப்பகுதியே போர்க்களமாக மாறியது. இதில் படுகாயமடைந்த ஒரு வழக்கறிஞர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்