டெல்லியில் 200 யூனிட் வரை மின்சாரத்துக்கு கட்டணம் இல்லை - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் முதல் 200 யூனிட் வரையிலான மின்சார பயன்பாட்டுக்கு கட்டணம் இல்லை என்றும், இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.;

Update: 2019-08-01 09:52 GMT
டெல்லியில் முதல் 200 யூனிட் வரையிலான மின்சார பயன்பாட்டுக்கு கட்டணம் இல்லை என்றும், இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதுவரை 200 யூனிட் பயன்படுத்தியவர்கள் 622 ரூபாய் கட்டணம் செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. 250 யூனிட் வரை இனிமேல் 252 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதுமானது. தற்போது 800 ரூபாய் செலுத்தி வருகின்றனர். 300 யூனிட் வரை பயன்படுத்தவர்கள் தற்போது 971 ரூபாய் செலுத்தி வரும் நிலையில், இனி 526 ரூபாய் செலுத்தினால் போதும் என்றும், 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் இனிமேல் ஆயிரத்து 320 ரூபாய்க்கு பதிலாக ஆயிரத்து 75 ரூபாய் மின்கட்டணம் செலுத்தினார் போதுமானது என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 
 

Tags:    

மேலும் செய்திகள்