விருதுநகர் அருகே மத்திய சேனை பகுதியில் பட்டாசு ஆலை தோட்டத்தில் கால்நடைக்கு தீவனம் பறித்தது தொடர்பான தகராறில், பட்டாசு ஆலை காவலாளி செல்லச்சாமி என்பவரை வெட்டி கொலை செய்த நபர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை செய்த படுகளம் என்ற நபர் பின்னர் அச்சத்தில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்