திருமணத்தை நிறுத்திய கடன் கும்பல் - மணப்பெண் தற்கொலை முயற்சி
கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே வட்டிக்கு கடன் கொடுக்கும் கும்பலால் திருமணம் நின்றுபோன வேதனையில், மணப்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். வர்க்கலாவை சேர்ந்த ஷைஜாவின் மகளுக்கு, வரும் ஒன்றாம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், ஷைஜாவுக்கு வட்டிக்கு பணம் கொடுத்த கும்பல், மணமகனின் வீட்டிற்கு சென்று, பெண்ணின் குடும்பத்தினர் தங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் எனவும், பணத்தை தரவில்லை என்றால் திருமணத்தை நடக்க விட மாட்டோம் எனவும் கூறியுள்ளனர். பதற்றம் அடைந்த மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்தினர். இதனால் மனம் உடைந்த மணப்பெண், அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
Next Story
