ரசாயனம் கலந்த மீன்களை தமிழகம் விற்கிறது - கேரள அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு

தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து காலாவதியான மீன்கள் அம்மோனியா போன்ற ரசாயனங்கள் உதவியுடன் பதப்படுத்தப்பட்டு கேரள சந்தைகளில் விற்கப்படுவதாக அம்மாநில அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் குற்றஞ் சாட்டியுள்ளார்.

Update: 2019-07-29 20:56 GMT
தமிழ்நாடு உள்ளிட்ட  பிற மாநிலங்களில் இருந்து காலாவதியான மீன்கள் அம்மோனியா போன்ற ரசாயனங்கள் உதவியுடன் பதப்படுத்தப்பட்டு கேரள சந்தைகளில் விற்கப்படுவதாக அம்மாநில  அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் குற்றஞ் சாட்டியுள்ளார். கேரள அரசின் கீழ் செயல்படும் கூட்டுறவு அமைப்பான மத்சிய பெட்  நிறுவன கடையை திருவனந்தபுரத்தில்  திறந்து வைத்து பேசிய அவர் , இவ்வாறு கூறியுள்ளார். மீனவர்களுக்கான பென்ஷன் தொகையை 600 ரூபாயிலிருந்து ஆயிரத்து இருநூறாக உயர்த்திய போதிலும் தங்களுக்கு கடந்த தேர்தலில் மீனவர்கள் தங்களுக்கு  வாக்களிக்கவில்லை என்று விரக்தியையும் வெளியிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்