அரசுப் பேருந்துக்குள் நடனம் ஆடிய இளம்பெண் : சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய வீடியோ

டெல்லியில் மாநகர பேருந்துக்குள் நடனமாடிய பெண்ணை வேடிக்கை பார்த்த, ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2019-07-20 03:59 GMT
டெல்லியில் மாநகர பேருந்துக்குள் நடனமாடிய பெண்ணை வேடிக்கை பார்த்த, ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆம் தேதி, டெல்லி நகர அரசு பேருந்துக்குள் இளம் பெண் பயணம் செய்துள்ளார். பேருந்து, டிப்போவுக்குள் வந்ததும், அப்பெண் திடீரென்று நடனமாட தொடங்கினார். அவரை கண்டிக்க வேண்டிய நிலையிலிருந்த பேருந்து ஓட்டுநர், நடத்துனர் ஆகியோர் கண்டிக்காமல் அவருடைய நடனத்தை வேடிக்கை பார்த்தனர். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து, பேருந்தின் ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்