கான்பூர் : சிறையில் இருந்து துப்பாக்கியால் மிரட்டும் கைதிகள் - சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ
உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் அருகே, உன்னா ஜெயிலில் இரண்டு கைதிகள், துப்பாக்கியுடன் மிரட்டும் வீடியோ காட்சி, சமூக வலை தளத்தில், பரவி வருகிறது.;
உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் அருகே, உன்னா ஜெயிலில் இரண்டு கைதிகள், துப்பாக்கியுடன் மிரட்டும் வீடியோ காட்சி, சமூக வலை தளத்தில், பரவி வருகிறது. அந்த கைதிகள் மது அருந்துவதும், துப்பாக்கியால் மிரட்டுவதுமாக, வீடியோ காட்சி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உயரதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக, உன்னா சிறை கண்காணிப்பாளர் கூறியுள்ளதுடன், அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இரண்டு சிறைக் காவலர்களுக்கு, இதில் தொடர்புள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.