சுயேச்சையாக களமிறங்குகிறார் நடிகை சுமலதா அம்பரீஷ் : ரஜினி, சிரஞ்சீவி வரவேற்பு தெரிவித்ததாக பேட்டி

மண்டியா தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு;

Update: 2019-03-18 21:07 GMT
நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷின் மனைவி சுமலதா, அவரது கணவரின் தொகுதியான மண்டியாவில் சுயேச்சையாக களமிறங்குகிறார். பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தார். கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜனதாதளம் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள நிலையில், மண்டியா தொகுதியில் முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி களமிறங்கப்பட்டுள்ளார். இதனால் காங்கிரஸ் மீது அதிருப்தி அடைந்துள்ள அவர், நிகில் குமாரசாமியை எதிர்த்து போட்டியிடுகிறார். தனது அரசியல் பிரவேசத்திற்கு ரஜினிகாந்த், சீரஞ்சிவி ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்