ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்திய ஆவணப்படம் : நாப்கின் தயாரிப்பில் பெண்கள்

இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்களின் பட்டியலில் இந்தியாவின் 'Period, End of Sentence' என்ற படம் ஆவணப்பட பிரிவில் இடம் பிடித்துள்ளது.

Update: 2019-02-12 12:16 GMT
இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்களின் பட்டியலில் இந்தியாவின் 'Period, End of Sentence'  என்ற படம் ஆவணப்பட பிரிவில் இடம் பிடித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை மையமாக வைத்து, பெண்களின் உடல் ஆரோக்கியம் குறித்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. அங்குள்ள பெண்கள் தாமாக முன்வந்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான நாப்கின்களை குழுவாக தயாரித்து வருகின்றனர். அது பற்றிய படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதி பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்