கொல்கத்தா காவல் ஆணையருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ முறையீடு...

கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ் குமாருக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2019-02-04 20:53 GMT
கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ் குமாருக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சாரதா சிட்பண்ட் விவகாரத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் சரியாக ஒத்துழைக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பான ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக நாளை விசாரணை நடத்தப்படும் எனவும், ராஜிவ் குமார் ஆதாரங்களை அழித்தற்கான ஆதாரங்கள் இருந்தால் அதனை சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது.
Tags:    

மேலும் செய்திகள்