ரூ.6 லட்சம் கோடி விவசாய கடன் தள்ளுபடி என வாக்குறுதி : காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு வாக்குறுதி அளித்தபடி, வேளாண் கடனை முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தள்ளுபடி செய்யவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-03 11:33 GMT
கடந்த 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் ஆறு லட்சம் கோடி ரூபாய் வேளாண் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்த காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வந்த பிறகு, வெறும் 52 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே தள்ளுபடி செய்ததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார். காஷ்மீர் மாநிலம் விஜய்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கடன் தள்ளுபடி பெற்றவர்களில், 30 லட்சம் பேர் தகுதியற்ற நபர்கள் என மத்திய கணக்கு தணிக்கை துறை சுட்டிக்காட்டி உள்ளதாகவும் கூறினார். தற்போது, மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு, அம்மாநிலத்தில், ​வெறும் 13 ரூபாய் கடன் தள்ளுபடி செய்ததாகவும்  மோடி விமர்சித்தார். அடுத்த 10 ஆண்டுகளுக்கு விவசாயிகளுக்கு ஏழரை லட்சம் கோடி ரூபாயை, அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த உள்ளதாகவும் மோடி அறிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்