கர்நாடகா மாநிலம் கர்வார் பகுதியில் படகு கவிழ்ந்து 8 பேர் உயிர் இழந்தனர். கர்வாரில் நடைபெற்ற திருவிழாவை ஒட்டி, பொதுமக்கள் 26 பேர் ஒரு படகில் பயணம் சென்றுள்ளனர். அப்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அனைவரும் தண்ணீருக்குள் மூழ்கினர். இதையடுத்து, கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில், 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 8 பேர், சடலங்களாக மீட்கப்பட்டனர். இன்னும் ஒருவரை மீட்கும் முயற்சி தொடர்ந்து நீடிக்கிறது.