"சபரிமலையில் பல முறை நடைமுறை மாற்றம் ஏற்பட்டுள்ளது" - பினராயி விஜயன் தகவல்

சபரிமலையில், தேவசம்போர்டு தயார் செய்த ரெடிமெட் இருமுடி கட்டு வாங்க முடியும் என கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-31 12:54 GMT
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலை கோயிலில் நெரிசலை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் மற்றும் திருவோண பண்டிகையின் போது நடை திறக்கப்பட்டு வருவதாக கூறினார். இது உதவிகரமான நடைமுறை மாற்றம் என்றும், அது குறித்து யாருக்கும் மாற்று கருத்து ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார். பக்தர்கள் தங்கள் வீடுகளில் அல்லது கோயில்களில் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது பம்பையில் தேவசம்போர்டு தயார் செய்த ரெடிமெட் இருமுடி கட்டு வாங்க முடியும் என கூறினார். ஹாஜி அலி தர்கா எனும் முஸ்லீம் ஆன்மீக தலத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி பெண்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்